Today School Leave District Nov 30
இன்று 30.11.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை முழு விவரம்
Today School Leave District Nov 30 :வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயல் இன்று (நவ.30) பிற்பகல் புதுச்சேரி அருகே கரையை கடக்கும் 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. புயலாக வலுப்பெற்றதால் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
ஃபெங்கல் புயல் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையைக் கடக்க வாய்ப்பு.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்ஜல் புயலின் நகரும் வேகம் அதிகரித்துள்ளது. மணிக்கு 10 கிலோ மீட்டரில் இருந்து 13 கிலோ மீட்டராக வேகம் அதிகரிப்பு.
நாகையில் இருந்து 270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது ஃபெஞ்சல் புயல்.
ரெட் அலர்ட்
சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் இன்று (நவ.30) அதி கனமழைக்கான ரெட் அலர்ட்-வானிலை ஆய்வு மையம்.
சென்னை முதல் காரைக்கால் வரை இன்று, மணிக்கு 70 கி.மீ வேகம் வரை தரைக்காற்று வீசக்கூடும்.
இன்று வட கடலோர மாவட்டங்களில் மணிக்கு 90 கி.மீ வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணிப்பு.
புதுவை முதல் சென்னை வரை இன்று அதி கனமழை பெய்யும் – பிரதீப் ஜான்
இன்று (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கடலூர் மாவட்டத்தில் இன்று (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.30) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை; எவ்வித சிறப்பு வகுப்பும் கூடாது – ஆட்சியர்
காஞ்சிபுரம் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஃபெஞ்சல் புயல் எதிரொலி – இன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு
விடுமுறைராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கும்பகோணம், திருவிடைமருதூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை அறிவிப்பு
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
இன்று (30.11.2024) புதுவை மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.
தேர்வுகள் ஒத்திவைப்பு
இன்று அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தேர்வு ஒத்திவைப்பு; நாளை (நவ.30) நடைபெறுவதாக இருந்த தேர்வு டிசம்பர்14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நாளை (நவ.30) நடத்தப்படவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (நவ.30) நடைபெறவிருந்த ரேஷன் கடைப் பணியாளர்கள் நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு
சென்னை – பூ – பூங்கா, கடற்கரைகள் மூடல் ஃபெஞ்சல் புயல் எதிரொலி – சென்னையில் இன்று பூங்கா மற்றும் கடற்கரைகள் மூடல் – பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
இன்று (நவ.30) பிற்பகல் புயல் கரையை கடக்கும்போது கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் பொது போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்
ஃபெஞ்சல் புயல் காரணமாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் திருவாரூர் வருகை ரத்து திருவாரூர் மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் தலைமையேற்று பட்டங்களை வழங்க இருந்தார்.
சென்னையில் 13 விமானங்கள் ரத்து ஃபெஞ்சல் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையத்தில் 13 விமானங்கள் ரத்து
பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.