இன்றைய ராசிபலன் டிசம்பர் 13 2024 Today Rasi Palan December 13

Today Rasi Palan December 13

இன்றைய ராசிபலன் டிசம்பர் 13 2024

இன்றைய ராசிபலன் கார்த்திகை: 28 வெள்ளிக்கிழமை 13.12.2024 ராசி- பலன்கள்  டிசம்பர் 13 2024 Today Rasi Palan December 13 2024

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Today Rasi Palan December 11
Today Rasi Palan December 13

 

🔯 இன்றைய ராசி நட்சத்திர பலன்கள் டிசம்பர் 13 2024

🔯 மேஷம் -ராசி: 🐐
கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தனம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐அஸ்வினி : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐பரணி : முடிவுகள் கிடைக்கும்.
⭐கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.

 

♉ ரிஷபம் – ராசி: 🐂
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனதில் ஒரு விதமான குழப்பமும், அமைதியின்மைக்கான சூழ்நிலையும் உருவாகும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.

⭐கிருத்திகை : விவாதங்களைத் தவிர்க்கவும்.
⭐ரோகிணி : சாதகம் உண்டாகும்.
⭐மிருகசீரிஷம் : அமைதியின்மை ஏற்படும்.

 

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍
சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். செய்யும் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். தேவையற்ற கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சகோதரர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தை கொடுக்கும். தொழிலில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். ரகசியமான செயல்பாடுகள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
⭐திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
⭐புனர்பூசம் : அனுபவம் ஏற்படும்.

 

♋ கடகம் – ராசி: 🦀
மருமகன் வழியில் இருந்துவந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுபகாரியங்களில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.

⭐புனர்பூசம் : வேறுபாடுகள் விலகும்.
⭐பூசம் : இடையூறுகள் விலகும்.
⭐ஆயில்யம் : திறமைகள் வெளிப்படும்.

 

♌ சிம்மம் – ராசி: 🦁
உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழல் காணப்படும். காப்பீடு தொடர்பான புரிதல்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. திடீர் தன வரவுகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். எண்ணம் ஈடேறும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐மகம் : புரிதல்கள் மேம்படும்.
⭐பூரம் : வரவுகள் ஏற்படும்.
⭐உத்திரம் : அறிமுகங்கள் உண்டாகும்.

 

♍ கன்னி – ராசி: 👩
ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐உத்திரம் : இழுபறிகள் குறையும்.
⭐அஸ்தம் : ஆதாயம் உண்டாகும்.
⭐சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.

Today Rasi Palan December 13
Today Rasi Palan December 13

 

 

♎ துலாம் – ராசி: ⚖
குடும்ப உறுப்பினர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதையும் சமாளிக்கும் மனோபலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செயல்படவும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். காப்பீடு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
⭐சுவாதி : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
⭐விசாகம் : விவேகத்துடன் செயல்படவும்.

 

♏ விருச்சிகம் – ராசி: 🦂
திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்.

⭐விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐கேட்டை : நெருக்கம் மேம்படும்.

 

♐ தனுசு – ராசி:  🏹
புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்வது மனதிற்கு நல்லது. உத்தியோகப் பணிகளில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். சுபகாரியப் பேச்சு வார்த்தைகள் கைகூடும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐மூலம் : நுட்பங்களை அறிவீர்கள்.
⭐பூராடம் : அமைதி உண்டாகும்.
⭐உத்திராடம் : முடிவுகள் கிடைக்கும்.

 

♑ மகரம் – ராசி: 🦌
பிள்ளைகளுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் மேம்படும். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். மனதில் கற்பனை சார்ந்த புது விதமான சிந்தனைகள் உருவாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புக்கள் குறையும். சிக்கல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐உத்திராடம் : லாபம் மேம்படும்.
⭐திருவோணம் :  உதவிகள் கிடைக்கும்.
⭐அவிட்டம் : பொறுப்புக்கள் குறையும்.

 

♒  கும்பம் – ராசி: 🍯
உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐அவிட்டம் : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐பூரட்டாதி : நம்பிக்கை ஏற்படும்.

 

♓ மீனம் – ராசி:  🐟
உடற்பயிற்சி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான சில விமர்சனங்கள் மறையும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூர பயணம் மூலம் ஆதாயம் உண்டாகும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் :  சந்தனவெள்ளை நிறம்.

⭐பூரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
⭐உத்திரட்டாதி :  மாற்றங்கள் ஏற்படும்.
⭐ரேவதி :  ஆதாயம் உண்டாகும்.

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. TN NEWS (live.tnnewscollection)  இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.

Home 

TN Job 360.in

Leave a Comment

error: Content is protected !!