Today School leave 03.12.2024
இன்று 03.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
Today School leave 03.12.2024: தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களுக்கும் மேலாக பெஞ்சால் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையை எதிர்கொண்டது மேலும் பல்வேறு மாவட்டங்களில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும் அளவில் இந்த புயலானது பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த புயலை புதுவை மாநிலம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட எந்த மாவட்டங்கள் இந்த புயலில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது இந்த மாவட்டங்களில் மழை பொழிவானது மிக அதிக கனமழையாக பதிவாகியுள்ளது சுமார் 50 சென்டிமீட்டருக்கும் மேல் ஒரே நாளில் மழையானது பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல்வேறு நான்கு சக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லும் அளவுக்கு இந்த மழையானது பெய்துள்ளது அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது இந்த பெஞ்சால் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் மூலம் அறிவிக்கப்படுகிறது அதுவும் அந்த மாவட்டத்தின் மழை அளவை கருத்தில் கொண்டும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும் பகுதி கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்படுகிறது இது மாணவர்களின் நலனுக்காக இந்த விடுமுறையானது அறிவிக்கப்படுகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையமானது இன்றும் பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவித்துள்ளது அதன்படி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் கரூர் ஈரோடு நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் திண்டுக்கல் தேனி மதுரை திருச்சி பெரம்பலூர் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக கனமழையால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை இந்த இயல்பு நிலை திரும்பிய பிறகு மாணவர்கள் செல்லும் பள்ளி பாதுகாப்பாக உள்ளதா என்பதை அந்த மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அளிக்கும் அறிக்கையை குறித்து இந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அதேபோல ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் முகாம்களாக பொதுமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் சரியான பின்பு அந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
03.12.2024 Today School Leave
எனவே இன்றும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை குறித்த அறிவிப்புகள் பள்ளி கல்லூரிகளுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த விடுமுறை அறிவிப்பானது இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட வாரியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இன்றுகனமழை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மேலும் கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மேலும் முகாம்களாக செயல்படக்கூடிய பள்ளிகள் உள்ளிட்ட பகுதிகளில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அல்லது பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அனைத்து தகவலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை அவ்வபோது பார்வையிடவும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நமது வாட்ஸ் அப் குழுவில் இணைவோம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
இன்று 03.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்
கடலூர் ( பள்ளி, கல்லூரி ) கனமழை விடுமுறை அறிவிப்பு – 03.12.2024
விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி ) கனமழை விடுமுறை அறிவிப்பு – 03.12.2024
பாண்டிச்சேரி – ( பள்ளி, கல்லூரி ) கனமழை விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி ( பள்ளி, கல்லூரி ) கனமழை விடுமுறை அறிவிப்பு – 03.12.2024
திருவண்ணாமலை (பள்ளி மட்டும்) விடுமுறை அறிவிப்பு
சேலம் ( பள்ளிகள் மட்டும் ) விடுமுறை அறிவிப்பு
ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும் ) விடுமுறை அறிவிப்பு
நீலகிரி ( பள்ளிகள் மட்டும் ) விடுமுறை அறிவிப்பு
கிருஷ்ணகிரி (ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும்)
கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
தேர்வு ரத்து
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (டிச.03) விடுமுறை அறிவிப்பு
கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தகவல்
ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்புகள் காரணமாக இன்று (டிச. 03) நடக்க இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தொழில்நுட்பக் கல்வி இயக்கக தலைவர் தகவல்
இன்று 03.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ள மாவட்டங்கள்