Today Rasi Palan December 10
இன்றைய ராசிபலன் டிசம்பர் 10 2024
இன்றைய ராசிபலன் கார்த்திகை: 25 செவ்வாய்கிழமை 10.12.2024 ராசி- பலன்கள் டிசம்பர் 10 2024 Today Rasi Palan December 10 2024
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
🔯 இன்றைய ராசி நட்சத்திர பலன்கள் டிசம்பர் 10 2024
🔯 மேஷம் -ராசி: 🐐
தாய்மாமன் வழியில் அனுசரித்து சென்றால் சாதகமான சூழ்நிலைகள் அமையும். கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். விதண்டாவாத சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் முக்கியமான சில பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். இனம் புரியாத சில நினைவுகள் மூலம் கவலைகள் தோன்றி மறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐அஸ்வினி : சாதகம் உண்டாகும்.
⭐பரணி : பொறுமையுடன் செயல்படவும்.
⭐கிருத்திகை : அறிமுகங்கள் ஏற்படும்.
♉ ரிஷபம் – ராசி: 🐂
குடும்ப உறுப்பினர்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். தகவல் துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும். வருமானத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐கிருத்திகை : முன்னேற்றம் ஏற்படும்.
⭐ரோகிணி : லாபம் உண்டாகும்.
⭐மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
♊ மிதுனம்- ராசி: 🤼♀
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை சார்ந்த செயல்பாடுகளில் லாபம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவார்கள். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் மேம்படும்
⭐திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐புனர்பூசம் : சாதகம் உண்டாகும்.
♋ கடகம் – ராசி: 🦀
பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். உறவினர்களால் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் மேம்படும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐புனர்பூசம் : விரயங்கள் ஏற்படும்.
⭐பூசம் : அலைச்சல் உண்டாகும்.
⭐ஆயில்யம் : ஆதாயம் மேம்படும்.
♌ சிம்மம் – ராசி: 🦁
பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். வியாபாரம் சார்ந்த எண்ணங்களை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாக நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். கவனம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐மகம் : விவேகம் வேண்டும்.
⭐பூரம் : தாமதம் உண்டாகும்.
⭐உத்திரம் : வாதங்களைத் தவிர்க்கவும்.
♍ கன்னி – ராசி: 👩
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் மேம்படும். சமூகப் பணிகளில் புதிய அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வழக்கு பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐உத்திரம் : சேமிப்புகள் மேம்படும்.
⭐அஸ்தம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐சித்திரை : முடிவுகள் பிறக்கும்.
♎ துலாம் – ராசி: ⚖
நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐சித்திரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐சுவாதி : தடைகள் விலகும்.
⭐விசாகம் : உதவிகள் கிடைக்கும்.
♏ விருச்சிகம் – ராசி: 🦂
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். முக்கியமான ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐விசாகம் : அனுசரித்து செல்லவும்.
⭐அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
⭐கேட்டை : ஆதரவு கிடைக்கும்.
♐ தனுசு – ராசி: 🏹
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களின் ஆதரவுகள் மேம்படும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணியில் அலைச்சல்கள் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐மூலம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐பூராடம் : மேன்மை உண்டாகும்.
⭐உத்திராடம் : குழப்பங்கள் குறையும்.
♑ மகரம் – ராசி: 🦌
உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதுவிதமான சூழலால் திருப்தியான மனநிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐உத்திராடம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐திருவோணம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐அவிட்டம்: அறிமுகம் ஏற்படும்.
♒ கும்பம் – ராசி: 🍯
வியாபார பணிகளில் ஆதாயம் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.
⭐அவிட்டம் : ஆதாயம் மேம்படும்.
⭐சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐பூரட்டாதி : குழப்பங்கள் விலகும்
♓ மீனம் – ராசி: 🐟
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி மறையும். புதுவிதமான பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐பூரட்டாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐உத்திரட்டாதி : எதிர்பார்ப்பு நிறைவேறும்.
⭐ரேவதி : ஆதரவுகள் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. TN NEWS (live.tnnewscollection) இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சூப்பர் வேலைவாய்ப்பு- தேர்வே கிடையாது 760 காலி பணியிடங்கள் அறிவிப்பு APPLY NOW