Today Rasi Palan December 9
இன்றைய ராசிபலன் டிசம்பர் 09 2024
இன்றைய ராசிபலன் கார்த்திகை: 24 திங்கள்கிழமை 09.12.2024 ராசி- பலன்கள் டிசம்பர் 09 2024 Today Rasi Natchathira Palan December 9 2024
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
🔯 இன்றைய ராசி நட்சத்திர பலன்கள்
🔯 மேஷம் -ராசி: 🐐
சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் வகையில் சுபவிரயங்கள் ஏற்படும். எதிர்பாராத செய்திகள் மூலம் சேமிப்புகள் குறையும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விருத்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐அஸ்வினி : அலைச்சல் உண்டாகும்.
⭐பரணி : சேமிப்புகள் குறையும்.
⭐கிருத்திகை : தடைகள் நீங்கும்.
♉ ரிஷபம் – ராசி: 🐂
எதிலும் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். தனம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
⭐கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
⭐ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
♊ மிதுனம்- ராசி: 🤼♀
உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளால் அனுகூலம் ஏற்படும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
⭐திருவாதிரை : அனுகூலம் ஏற்படும்.
⭐புனர்பூசம் : கலகலப்பு உண்டாகும்.
♋ கடகம் – ராசி: 🦀
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். சமூகப் பணிகளில் மேன்மை ஏற்படும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். உயர்கல்வி சார்ந்த குழப்பங்கள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். இறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐புனர்பூசம் : புரிதல்கள் அதிகரிக்கும்.
⭐பூசம் : தடைகள் விலகும்.
⭐ஆயில்யம் : முன்னேற்றம் உண்டாகும்.
♌ சிம்மம் – ராசி: 🦁
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அமைதி வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
⭐மகம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐பூரம் : அலைச்சல் ஏற்படும்.
⭐உத்திரம் : கவனம் வேண்டும்.
♍ கன்னி – ராசி: 👩
நண்பர்கள் வழியில் ஒற்றுமை ஏற்படும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தவறிப் போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐உத்திரம் : ஆர்வம் ஏற்படும்.
⭐அஸ்தம் : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐சித்திரை : அனுபவங்கள் கிடைக்கும்.
♎ துலாம் – ராசி: ⚖
உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் சாதகமான உதவிகள் ஏற்படும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். புதுவிதமான கனவுகள் உருவாகும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐சுவாதி : புரிதல் உண்டாகும்.
⭐விசாகம் : வேறுபாடுகள் குறையும்.
♏ விருச்சிகம் – ராசி: 🦂
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அலைச்சலும் மகிழ்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பழைய நினைவுகள் மூலம் இன்பமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். மறதி விலகும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐விசாகம் : ஒற்றுமை ஏற்படும்.
⭐அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
⭐கேட்டை : மேன்மை ஏற்படும்.
♐ தனுசு – ராசி: 🏹
எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். சுபகாரியங்களில் விவேகம் வேண்டும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். நிம்மதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.
⭐மூலம் : உதவிகள் கிடைக்கும்.
⭐பூராடம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐உத்திராடம் : சாதகம் உண்டாகும்.
♑ மகரம் – ராசி: 🦌
எதிர்ப்புகளை சாமார்த்தியமாக வெற்றி கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நவீன தொழில்நுட்பக் கருவிகளில் ஆர்வம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
⭐திருவோணம் : பிரச்சனைகள் குறையும்.
⭐அவிட்டம் : திறமைகள் வெளிப்படும்.
♒ கும்பம் – ராசி: 🍯
கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல் மூலம் மாற்றமான சூழல் ஏற்படும். கூட்டாளிகளுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐அவிட்டம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐சதயம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.
♓ மீனம் – ராசி: 🐟
மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை விஷயங்களால் சேமிப்புகள் குறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சமூக சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சி அதிகரிக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீல நிறம்.
⭐பூரட்டாதி : சேமிப்புகள் குறையும்.
⭐உத்திரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
⭐ரேவதி : மதிப்பளித்து செயல்படவும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. TN NEWS (live.tnnewscollection) இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.
தமிழக அரசின் சூப்பர் வேலைவாய்ப்பு- தேர்வே கிடையாது 760 காலி பணியிடங்கள் அறிவிப்பு APPLY NOW