TNPSC Group 2 Result 2024 Download
TNPSC குரூப் 2 குரூப் 2A தேர்வு முடிவு வெளியீடு
டி என் பி எஸ் சி குரூப் 2 குரூப் 2a தேர்வு முடிவு வெளியீடு
TNPSC Group 2 Result 2024 Download தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 மற்றும் குரூப் 2a தேர்வுக்கான தேர்வு முடிவுகளை சற்று முன் வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |

தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் குரூப் 2, 2ஏ தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியான அறிவிப்பில், 2,327 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வுகளுக்கு 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 2.50 லட்சம் பேர் தேர்வை எழுதவில்லை என்று கூறப்படுகிறது.
காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தொடர்ந்து காலி இடங்களின் எண்ணிக்கை நவம்பர் மாதம் அதிகரிக்கப்பட்டது. திருத்தப்பட்ட பணிகளின் அடிப்படையில் வனத்துறையில் வனவர் பணி இடங்கள் 121 ஆகவும், குற்ற விசாரணைத் துறையில் 22 பணி இடங்கள் ஆகவும், லஞ்ச ஒழிப்புத்துறையில் 3 ஆகவும், தொழிலாளர் துறையில் 16 ஆகவும், சட்டத் துறையில் 6 ஆகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக குரூப் 2 தேர்வுக்கு 213 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், மொத்த காலியிடங்கள் 2,327-ல் இருந்து 2 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தேர்வு எழுதிய தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேர்வு முடிவு பார்ப்பதற்கான லிங்க்
டிஎன்பிஎஸ்இ குரூப் – 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்.
tnpscresults.tn.gov.in, tnpscexams.in இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
TNPSC Latest News – Click