Breaking News மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியீடு TNEB Bill Pay Nov 2024 Last Date Extended 

TNEB Bill Pay Nov 2024 Last Date Extended  

மின் கட்டணம் செலுத்துவது குறித்து மின்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு 

TNEB Bill Pay Nov 2024 Last Date Extended : தமிழ்நாடு மின்துறை அமைச்சர் மின் கட்டணம் செலுத்துவது தொடர்பாக ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
TNEB Bill Pay Nov 2024 Last Date Extended 
TNEB Bill Pay Nov 2024 Last Date Extended

அதன்படி தற்போது தமிழக முழுவதும் பெஞ்சால் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்திருந்த நிலையிலும் குறிப்பிட்ட நான்கு மாவட்டங்கள் இந்த கனமழையால் அதிக பாதிப்பு ஆகி உள்ளதால் மின்கட்டணம் செலுத்துவதற்கு இந்த மாவட்டங்களுக்கு கால அவகாசத்தை அதாவது மின் கட்டணம் செலுத்தும் தேதியானது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எந்தவித அபராத தொகையும் செலுத்த தேவையில்லை என்று மின்வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது இதனை தமிழ்நாடு மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்களின் உத்தரவுக்கு இணங்கி எந்த தகவலை வெளியிட்டுள்ளார் அதைப் பற்றிய முழுமையான விவரத்தை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.

மின்துறை அமைச்சர்

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு பல்வேறு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மின்கட்டணம் செலுத்துவதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள மின்நுகர்வோர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin (https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw) அவர்களின் ஆணைக்கிணங்க, பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, மின் கட்டணத்தை… pic.twitter.com/UOFlKSTJDN (https://t.co/UOFlKSTJDN)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) November 30, 2024 (https://twitter.com/V_Senthilbalaji/status/1862834365799280824?ref_src=twsrc%5Etfw)
TNEB Bill Pay Nov 2024 Last Date Extended 
TNEB Bill Pay Nov 2024 Last Date Extended

இடர்பாடுகளை கருத்தில் கொண்டு 30.11.2024 முதல் 09.12.2024 வரை மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகையினை செலுத்த வேண்டிய மின்நுகர்வோர்கள் அபராதத் தொகை இல்லாமல் 10.12.2024 வரை செலுத்த கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

TN NEWS LIVE

Leave a Comment

error: Content is protected !!