தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!.. TN Local Holiday Dec 13

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!- வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!..

TN Local Holiday Dec 13

TN Local Holiday Dec 13: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெற்று வருகின்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றப்படும். நிகழ்ச்சி வருகின்ற 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது இந்த விழாவினை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
TN Local Holiday Dec 13
TN Local Holiday Dec 13

விழாவின் சிகர நிகழ்ச்சியான வருகிற 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலையில் கோவிலில் பரணி தீபமும் மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகின்ற 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது,

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு என்னவென்றால்,

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை மகா தீப திருவிழா நாளான 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அன்று மாவட்டத்திலுள்ள மாநில அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கும் அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்), அரசு சார்புடைய நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற 21 ஆம் தேதி சனிக்கிழமை மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் வேலை நாளாக செயல்படும். மேலும் மாவட்ட கருவூலம் மற்றும் சாரநிலை கருவூலங்கள் அனைத்தும் குறைந்தபட்ச எண்ணிக்கை உடனான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!