Tamilnadu Half Yearly Exam Postponed 2024: தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா?- அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Tamilnadu Half Yearly Exam Postponed 2024

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்படுமா?- அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

Tamilnadu Half Yearly Exam Postponed 2024: தென்மேற்கு வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமானது ஃபெஞ்சல் புயலாக வலுப்பெற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை  கடந்தது. இதனால் பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பொழிந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளைக்காடாக காட்சியளித்தது.

நமது Whatsapp, Telegram குழுவில் இணைய....
Whatsapp Group Join
Telegram Channel Join
Whatsapp Channel Join
 
Tamilnadu Half Yearly Exam Postponed 2024
Tamilnadu Half Yearly Exam Postponed 2024

இதனால், கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலுர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி, தேர்வு தள்ளிவைக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது. 

மேலும் இந்த மாத இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் இவ்விடுமுறைகளால் பாடங்கள் ஏதும் முடிக்காத சூழலில் எவ்வாறு மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வந்திருந்த நிலையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அரையாண்டு தேர்வு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “
வெள்ளம் பாதித்த பகுதிகளில் டிசம்பர் ஒன்பதாம் தேதிக்குள் நிலைமை சீரடையாவிட்டால், அந்த பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ஜனவரி முதல் வாரத்தில் எழுதுவதற்கு அறிவுறுத்தி இருக்கிறோம். இது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்வார்கள். டிசம்பர் 2ஆம் தேதி தொடங்க இருந்த செய்முறை தேர்வு வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் ஜனவரி முதல் வாரத்தில் நடத்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது மழையால் பாதிக்கப்பட்டு அரையாண்டு தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் தேர்வு நடைபெறும் எனவும் மழையால் விழுப்புரத்தில் உள்ள 45 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புதிய நோட்டு புத்தகங்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

error: Content is protected !!