Nov 27th Today School leave live News
இன்று (27.11.2024) தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை
Nov 27th Today School leave live News : இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு வந்த வண்ணம் உள்ளது அந்த வகையில் தற்போது இதுவரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்களை நாம் இப்போது காண இருக்கிறோம் .
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
மேலும் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே விடுமுறை அறிவிப்பு வெளிவரக்கூடிய மாவட்டங்கள் பற்றிய விவரங்கள் தொடர்ந்து இந்த இணையதளத்தில் பதிவு செய்யப்படும் எனவே மாணவர்கள் இந்த இணையதள பக்கத்தை தொடர்ந்து சரி பார்த்துக் கொள்ளவும்.
ஏனெனில் இதில் விடுமுறை குறித்த தகவல்கள் நேரலையாக பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் எனவே உடனுக்குடன் விடுமுறை தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த இணையதள பக்கத்தை பார்க்கவும்.
மேலும் நமது வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் குழுவில் விடுமுறை குறித்த தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்படும் எனவே அதில் தாங்கள் இணைந்து கொள்ளலாம் என்ற கருத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தற்போது இதுவரை விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள் மற்றும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் விவரங்கள் மற்றும் ரேஷன் கடை நேர்முகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் பற்றிய முழுமையான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை முழுமையாக படித்து பார்க்கவும்.
இன்று (27.11.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை today school leave district in tamilnadu
கனமழை எதிரொலி: இன்று (27.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு.
கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் (நவ.27) விடுமுறை -மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார்.
கனமழை எதிரொலி: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று (27.11.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
கனமழை எச்சரிக்கை காரணமாக செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று (நவ.27) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
திருவாரூரில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
திருவள்ளூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.
திருச்சி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு
இன்று (நவ.27) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை-மாவட்ட ஆட்சியர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு
இன்று (நவ.27) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
அரியலூர் மாவட்டத்தில்
பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.27) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு.
கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் இன்று நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் – பாரதிதாசன் பல்கலைக்கழகம்.
கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு இன்று (நவ.27) விடுமுறை அறிவிப்பு
இன்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தேர்வுகளும் ஒத்திவைப்பு.
மயிலாடுதுறை நேர்முக தேர்வு ஒத்திவைப்பு.
மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற இருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணிக்கான நேர்முக தேர்வு ஒத்திவைப்பு.
டிசம்பர் 4-ம் தேதிக்கு நேர்முகத் தேர்வை ஒத்திவைத்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் உத்தரவு.
வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்:
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறும்.
புயல் கரையை கடப்பது குறித்து இதுவரை எதுவும் கணிக்கப்படவில்லை.
அடுத்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும்.
பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
நமது Whatsapp, Telegram குழுவில் இணைய….
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |