Local Holiday Santhanakoodu 2024
தமிழக அரசு டிசம்பர் 12 உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாணவர்கள் மகிழ்ச்சி
Local Holiday Santhanakoodu 2024 பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை தமிழக அரசானது வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது உள்ளூர் விடுமுறை என்பது வழக்கமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் முக்கியமாக கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளுக்கு அளிக்கக்கூடிய விடுமுறையாகும்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இது அந்த மாவட்டத்தின் சிறப்பு மிக்க பண்டிகையாக கருதப்படும் மேலும் இந்த பண்டிகைக்கு மாவட்டத்தில் உள்ள மக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில் இந்த உள்ளூர் விடுமுறையை வழங்குவது அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
அந்த வகையில் வருகிற டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
நாகூர் தர்கா பெரிய கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழாவானது டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.