Karthigai Deepam Schools 9 days Holiday
கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
Thiruvannamalai Karthigai Deepam 2024
Thiruvannamalai Karthigai Deepam Schools 9 days Holiday திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உலக பிரசித்தி பெற்ற சிவன் கோயிலாகும் இக்கோவிலானது பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னியை மையமாகக் கொண்டு வணங்கப்படுகின்ற முக்கிய தளமாக கருதப்படுகிறது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இந்த திருவண்ணாமலை அண்ணாமலையாரை ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் பல லட்சக்கணக்கில் பக்தர்கள் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலம் பாதையில் நடந்து கிரிவலம் செல்கின்றனர்.
அப்படிப்பட்ட இந்த திருவண்ணாமலை கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழாவும் கார்த்திகை தீபத் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது.
அதுவும் இந்த கார்த்திகை தீப திருவிழாவானது டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது இந்த திருவிழாவானது டிசம்பர் 17ஆம் தேதி நிறைவடைகிறது டிசம்பர் 1ம் தேதி அருள்மிகு துர்க்கை அம்மன் உற்சவத்தில் தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி சந்திரசேகர் உற்சவத்துடன் இந்த திருவிழாவானது நிறைவடைகிறது.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மையாருக்கு பரணி தீபமானது டிசம்பர் 13ஆம் தேதி காலையில் ஏற்றப்படும் அதனைத் தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு மகா தீபமானது ஏற்றப்படும்.
இந்த நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி இந்த கார்த்திகை தீபத்தை சிறப்பாக கொண்டாடுவார்கள் திருவண்ணாமலை மாவட்டமானது திருவிழா கோலத்தில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் வான வேடிக்கைகள் தீபாவளி தினத்தை காட்டிலும் கார்த்திகை தீபத்தை இங்குள்ள மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர்.
எனவே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெற்று வருகின்ற தீபத் திருவிழாவை காண பல லட்சம் மக்கள் வெளிநாடுகளிலும் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் எனவே அவர்களை பாதுகாக்கும் பொறுப்பானது தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழகம் முழுவதிலும் இருந்து காவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வந்து தங்களுடைய பாதுகாப்பு பணியை மேற்கொள்ள உள்ளார்கள் இந்த காவலர்கள் திருவண்ணாமலையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட உள்ள 156 பள்ளிகளுக்கு மட்டும் டிசம்பர் 8 ம் தேதி முதல் வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.