Inactive Bank accounts RBI Order 2025
செயல்படாத வங்கி கணக்கிற்கு : ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு!
Inactive Bank accounts RBI Order 2025 ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பல்வேறு வங்கிகளில் கணக்குகளை வைத்திருப்பார்கள் ஆனால் அதில் ஒரு சில வங்கிகளில் மட்டும் பணப்பரிவினைகளை மேற்கொள்வார்கள் மற்ற வங்கிகளில் உள்ள கணக்குகளுக்கு எந்த விதமான பணப்பரிவினைகளையும் செய்யாமல் இருப்பார்கள்.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
மேலும் அதேபோல அந்த செயல்படாத அந்த குறிப்பிட்ட வங்கியில் உள்ள கணக்கிற்கு தேவையான கேஒய்சி KYC தகவல்கள் Aadhaar ஆதார் PAN பேன் உள்ளிட்ட அடையாள ஆவணங்கள் எதையும் அளிக்காமலும் அதே போல எந்தவிதமான பயன்பாட்டில் உள்ள மொபைல் எங்களையும் அந்த வங்கிக் கணக்கிற்கு பயன்படுத்தாமலும் இருப்பார்கள் அவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன தெரியுமா? செயல்படாத வங்கி கணக்கு என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்
செயல்படாத வங்கி கணக்கு என்பது என்ன தெரியுமா?
ஒருவர் அந்த வங்கிக் கணக்கில் எந்தவிதமான பணப் பரிமாற்றமும் செய்யாமல் அதாவது நீண்ட காலமாகவே பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் மேலும் குறிப்பிட்ட காலத்துக்குள் கேஒய்சி KYC தகவல்களை புதுப்பிக்காத காரணங்களாலும் செயல்படாத வங்கி கணக்குகள் இருக்கும்.
ஒருவர் இறந்திருக்கலாம் அவர் தன்னுடைய வாரிசுக்கு அந்த வங்கியில் கணக்கு உள்ளதை தெரியப்படுத்தாமலும் அந்த கணக்கு பற்றிய குடும்பத்தில் யாருக்கும் தெரியாமலும் நீண்ட நாட்களாக அந்த வங்கி கணக்கு செயல்பாடு இல்லாமலும் இருக்கலாம் இது போன்றும் செயல்படாத வங்கி கணக்குகள் காணப்படலாம்.
அதேபோல வங்கிக்கு தேவையான அடையாள ஆவணங்கள் எதையும் வங்கிகளுக்கு அளிக்காமல் வங்கியால் அந்த கணக்கு முடக்கப்பட்டும் இருக்கலாம் இதுபோன்ற பல காரணங்களால் இந்த செயல்படாத வங்கி கணக்குகள் காணப்படலாம்.
செயல்படாத வங்கி கணக்குகளுக்கு ரிசர்வ் வங்கி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது
அதில் நாம் ஒன்றன்பின் ஒன்றாக முழுமையான விவரங்களை நாம் பார்க்க இருக்கிறோம்
செயல்படாத வங்கி கணக்குகள் அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை மீண்டும் பயன்படுத்த அந்த வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவிக்கிறது.
ஒரு வருடத்தின் ஒரு காலாண்டுக்கு ஒரு முறை அதாவது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செயல்படாத வங்கி கணக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அந்த வங்கியின் மேலாளர் மேனேஜர் Manager என்பவர் அவரின் மூத்த மேற்பார்வை மேலாளருக்கு வருகிற டிசம்பர் காலாண்டு முதல் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியானது அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது என்னவென்றால் ஒரு சில வங்கிகளின் மொத்த டெபாசிட் பணமதிப்பை விட செயல்படாத அல்லது முடக்கப்பட்ட அல்லது உரிமை கோரப்படாத கணக்குகளில் உள்ள டெபாசிட் தொகை அதைவிட அதிகமாக உள்ளது.
எனவே அந்தந்த வங்கிகள் ஊறிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் அந்த நடவடிக்கைகளின் படி செயல்படாத அல்லது உரிமை கோரப்படாத அல்லது முடக்கப்பட்ட வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மேலும் அவற்றை முடிந்த அளவு செயல்படும் கணக்குகளாக மாற்ற எளிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி உதாரணமாக ரிசர்வ் வங்கி என்ன தெரிவித்துள்ளது என்றால் கேஒய்சி KYC வாயிலாக தடையற்ற முறையில் புதுப்பிக்க கைபேசி Mobile அல்லது Internet Banking இணைய வங்கி மூலம் பிற வங்கி கிளை மற்றும் வீடியோ கால் வாயிலாக வாடிக்கையாளரை அடையாளம் காண்பது போன்றவற்றை வங்கிகள் செயல்படுத்த வேண்டும்.
என்றும் மேலும் மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் நலத்திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகள் தகவல்களை புதுப்பிக்க வில்லை எனக் கூறி முடக்குவதை நாங்கள் காண முடிகிறது எனவே இது போன்ற வங்கி கணக்குகளை தனியாக பிரித்து அந்த நலத்திட்ட பயனாளர்களின் திட்டங்கள் எந்தவித தடையும் இன்றி அந்தப் பயனாளருக்கு உரிய நிதி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.