6th to 12th Class Halfly Exam Time Table 2024 Release
6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வு கால அட்டவணை வெளியீடு
Halfly Exam Time Table 2024 Release அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23ம் தேதி (திங்கட்கிழமை) வரைநடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
தற்போது 6 முதல் 9ம் வகுப்பு வரை மற்றும் பிளஸ் 1க்கும் தேர்வுக்கான முழு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 6 முதல் 9ம் வகுப்பு வரைக்கும் 9ம் தேதி தமிழ், 10ம் தேதி(செவ்வாய்க்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி (வியாழக்கிழமை) ஆங்கிலம், 16ம் தேதி(திங்கட்கிழமை) கணிதம், 18ம் தேதி(புதன்கிழமை) உடற்கல்வி, 20ம் தேதி(வெள்ளிக்கிழமை) அறிவியல், 23ம் தேதி(திங்கட்கிழமை) சமூக அறிவியல் தேர்வும் நடக்க உள்ளது.
இதில் 6ம் வகுப்புக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், 7ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும், 8ம் வகுப்புக்கு 10 மணி முதல் 12.30 மணி வரையிலும், 9ம் வகுப்புக்கு பிற்பகல் 2 மணி முதல் 4.30 மணி வரையிலும் தேர்வுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்புக்கு 10ம் தேதி தமிழ், 11ம் தேதி(புதன்கிழமை) விருப்ப மொழி, 12ம் தேதி ஆங்கிலம், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி(வியாழக்கிழமை) அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வும் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் நடைபெற இருக்கிறது.
பிளஸ்-1 வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 16ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 18ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 20ம் தேதி இயற்பியல், பொருளியல், 23ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும் தேர்வு நடக்கிறது.
10ம் வகுப்புக்கு 9ம் தேதி தமிழ், 10ம் தேதி ஆங்கிலம், 12ம் தேதி கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 16ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 18ம் தேதி உயிரியியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட சில பாடங்களுக்கும், 20ம் தேதி வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல், 23ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள் தேர்வும் நடக்க உள்ளது. இந்த தேர்வுகள் காலை 9.45 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது.
School Department Website