26.11.2024 Today Leave News Live
இன்று விடுமுறை பள்ளி கல்லூரிகள் தேர்வு ஒத்திவைப்பு முழு விவரம்
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஓட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
இது வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் அதன் பிறகு அடுத்த இரண்டு தினங்களுக்கு வடமேற்கு திசையில் தமிழகம் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக தமிழகத்தில் மிக அதிக கன மழை ஆனது மயிலாடுதுறை நாகப்பட்டினம் திருவாரூர் மாவட்டங்களில் பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல விழுப்புரம் புதுக்கோட்டை சிவகங்கை அரியலூர் தஞ்சாவூர் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி பெரம்பலூர் திருச்சி ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இன்று அதிகாலை முதலே சென்னையிலும் ஒரு சில பகுதிகளில் மிக கனமழை பெய்து வருகிறது.
இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே நாகை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதாலும்.
இன்று நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள்.
கனமழை எதிரொலி: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு
இன்று மிக கனமழை வாய்ப்புள்ளதால் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் தேர்வுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.