Tomorrow School leave 04.12.2024
நாளை 04.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்
Tomorrow School leave 04.12.2024 : தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக பெஞ்சால் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழையை எதிர்கொண்டது மேலும் பல்வேறு மாவட்டங்களில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்படும் அளவில் இந்த புயலானது பாதிப்பை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
அதிலும் குறிப்பாக இந்த புயலை புதுவை மாநிலம் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட எந்த மாவட்டங்கள் இந்த புயலில் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது இந்த மாவட்டங்களில் மழை பொழிவானது மிக அதிக கனமழையாக பதிவாகியுள்ளது சுமார் 50 சென்டிமீட்டருக்கும் மேல் ஒரே நாளில் மழையானது பதிவாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பல்வேறு நான்கு சக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லும் அளவுக்கு இந்த மழையானது பெய்துள்ளது அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலம் பகுதியில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது இந்த பெஞ்சால் புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்பது தற்போது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களின் மூலம் அறிவிக்கப்படுகிறது அதுவும் அந்த மாவட்டத்தின் மழை அளவை கருத்தில் கொண்டும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கும் பகுதி கருத்தில் கொண்டும் மாணவர்களுக்கு விடுமுறையானது அறிவிக்கப்படுகிறது இது மாணவர்களின் நலனுக்காக இந்த விடுமுறையானது அறிவிக்கப்படுகிறது.
மிக கனமழையால் பாதிக்கப்பட்ட புதுவை மற்றும் தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை இந்த இயல்பு நிலை திரும்பிய பிறகு மாணவர்கள் செல்லும் பள்ளி பாதுகாப்பாக உள்ளதா என்பதை அந்த மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அளிக்கும் அறிக்கையை குறித்து இந்த மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அதேபோல ஒரு சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் முகாம்களாக பொதுமக்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அவை அனைத்தும் சரியான பின்பு அந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.
இது போன்ற அனைத்து தகவலும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை அவ்வபோது பார்வையிடவும் அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது நமது வாட்ஸ் அப் குழுவில் இணைவோம் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நாளை 04.12.2024 பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிப்பு மாவட்டங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.04) விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கடலூரில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர்
புதுச்சேரியில் 22 அரசுப்பள்ளிகளுக்கு நாளை (டிச.04) விடுமுறை
தண்ணீர் தேங்கி நிற்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது