TNSSP Login 2024-25
TNSSP கல்வி உதவித்தொகை 2024-25 விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
கல்வி உதவித்தொகை 2024-25 ஆம் ஆண்டு விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
TNSSP Login 2024-25 இந்த ஆண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் விண்ணப்பிக்க முன் கீழ் கண்ட ஆவணங்கள் சரியாக உள்ளனவா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
மாணவர்கள் விண்ணப்பிக்கும் முன் தயார் நிலையில் வைத்துள்ள ஆவணங்கள் என்ன எவ்வாறு விண்ணப்பிக்கலாம் உள்ளிட்ட முழு விவரத்தை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்
- மாணவர்களின் பெயர் பாலினம் பிறந்த தேதி ஆகியவை கல்வி நிறுவனங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு உள்ளவாறு ஆதாரில் இடம் பெற்றுள்ளது உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு இல்லையெனில் பள்ளி சான்றிதழ்களில் இடம் பெற்றுள்ளவாறு மாணவர்களின் பெயர் ஆதாரில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
2.புதிய அல்லது புதுப்பித்தல் மாணவர்கள் கட்டாயம் இணைய வழி மூலம் ஆன்லைனில் வருமான சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.
3.மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு எண் இருத்தல் வேண்டும் அவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கி கணக்கு எண் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
4.மாணவர்களின் வங்கிக் கணக்கில் இடம்பெற்றுள்ள பெயர் அம்மானாக்களின் பள்ளி சான்றிதழ்களில் உள்ளவாறு இடம் பெற்றுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
5.மானாக்களின் வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் அவ்வாறு இணைக்கப்படவில்லை எனில் வங்கி கணக்குடன் ஆதார் என் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்
6.மாணவர்களின் வங்கி கணக்குக்கு நேரடி பலன் பரிமாற்றத்தை பெறுவதற்கு (DBT) மாணாக்கரின் ஆதார் எண் NPCI உடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணையதள முகவரி மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
7.மாணவர்களின் ஆதார் எண் NPCI உடன் இணைக்கப்படவில்லை எனில் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும்.
8.மாணவர்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள முந்தைய வங்கி கணக்கு எண்ணை மாற்றம் செய்ய வேண்டும் எனில் மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டிய புதிய வங்கி கணக்கு விவரங்களை வங்கியின் கிளை மேலாளிடம் சமர்ப்பிக்கும் போது கட்டாயம் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட முந்தைய வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
9.மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் கட்டாயம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
10.கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மத்திய அல்லது மாநில அரசின் பணிபுரிந்து இருந்தால் அவர்கள் பணிபுரியும் அலுவலரிடம் இருந்து வருமான சான்றும் பெ ஸ்லிப் மேலும் வருவாய் துறை இடமிருந்து வருமான சான்றும் (Income from all source – HRA நீங்களாக) கட்டாயம் கல்வி நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
11.போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்ட வழிகாட்டுதலின்படி கல்வி உதவித்தொகை மாணவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குக்கு வரவு வைக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் கல்வி கட்டணமானது கல்லூரிக்கு மாணவிகளினால் செலுத்தப்பட வேண்டும்.
12.கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களின் மூலம் UMIS இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ளவும்.