2 days Rain leave District
2 நாட்களுக்கு கனமழை விடுமுறை அறிவித்துள்ள மாவட்டங்கள்
நாளை கனமழை காரணமாக விடுமுறை அறிவிப்பு
2 days Rain leave District : தமிழகத்தை பொறுத்தவரை கனமழையானது நேற்று முதல் தமிழக முழுவதும் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது அதுவும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மிக கனமழையானது பெய்து வருகிறது இதனால் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையானது ஒரு சில மாவட்டங்களில் விடப்பட்டிருந்தது.
Whatsapp Group | Join |
Telegram Channel | Join |
Whatsapp Channel | Join |
தற்போது இந்த கன மழை காரணமாக நாளை நவம்பர் 29ஆம் தேதி கனமழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் கனமழை காரணமாக நேர்முக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை நாம் இப்போது பார்க்க இருக்கிறோம்.
நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் நாளை (நவ.29) அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது-சென்னை வானிலை ஆய்வு மையம்.
புயல் 30ம் தேதி கரையை கடக்கும் – பாலச்சந்திரன்
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை காலைக்குள் தற்காலிகமாக புயலாக வலுப்பெறக்கூடும்.
வரும் 30ம் தேதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காரைக்கால்- மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் – வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
தகவல் சென்னைக்கு 480 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது – பாலச்சந்திரன்
2 நாட்களுக்கு விடுமுறை
கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு.
நாளை (29.11.2024) மற்றும் நாளை மறுநாள் (30.11.2024) புதுவை மாநிலத்தில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை.
நாளை (29.11.24) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை எதிரொலி: நாளை (29.11.2024) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – புதுச்சேரி அரசு.
கனமழை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (நவ.29) விடுமுறை -மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார்.
கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒருநாள் (நவ.29) விடுமுறை -மாவட்ட ஆட்சியர்
தேர்வுகள் ஒத்திவைப்பு
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் நாளை(நவ.29) நடக்கவிருந்த பருவ தேர்வுகள் ஒத்திவைப்பு
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகலாம் என தெரிகிறது.
நமது இந்த இணையதளத்தில் விடுமுறை குறித்த அரசின் அறிவிப்பு உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் எனவே மாணவர்கள் இன்று விடுமுறை அறிவிக்கக்கூடிய அனைத்து மாவட்டங்கள் பற்றிய முழு விவரங்களை இந்த இணையதளத்தின் https://live.tnnewscollection.in/ வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.